×

மாடு முட்டி படுகாயமடைந்த சிறுமிக்கு சிறந்த முறையில் சிகிச்சை: ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மாடு முட்டி படுகாயமடைந்த சிறுமிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி, இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாயுடன் நடந்து சென்ற ஒரு பள்ளிச்சிறுமியை, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாக தாக்கியது.

தொடர்ந்து அருகில் இருந்த ஒருவர் தடியால் மாட்டை விரட்டி சிறுமியை காப்பாற்றினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பசுமாடு பள்ளி குழந்தையை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரையும் திகிலுரச் செய்தது. பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து விசாரணை நடத்திய அரும்பாக்கம் போலீசார் சாலையில் அஜாக்கிரதையாக மாடுகளை அழைத்து சென்ற உரிமையாளரான அரும்பாக்கத்தை சேர்ந்த விவேக் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து அவர் பேசியபோது மாடு முட்டி படுகாயமடைந்த குழந்தைக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியை முட்டிய மாடு, பெரம்பூரில் உள்ள மாநகராட்சி தொழுவத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மாடு வளர்ப்பது மிக சிரமமான பணியாகும். நேற்று வெறி பிடித்தது போல் காணப்பட்ட மாடு தற்போது அமைதியாக உள்ளது. தெருக்களில் மாடுகளை சுற்ற விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

The post மாடு முட்டி படுகாயமடைந்த சிறுமிக்கு சிறந்த முறையில் சிகிச்சை: ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Radhakrishnan ,Chennai ,Arumbakkam ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...